பிரித்தானியாவின் மோசமான நிலை: பல ஆயிரம் லிற்றர் பால்களிற்கு நேர்ந்த கதி
பிரித்தானியாவில் பல ஆயிரம் லீற்றர் பாலை விவசாயிகள் சாக்கடையில் கொட்டும் நிலைக்கு ஆளாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் தொடரும் கனரக ட்ரக் சாரதிகளின் பற்றாக்குறை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
பிரித்தானியாவில் பால் உற்பத்தியாளர்கள் அவர்கள் உற்பத்தி செய்யும் பாலைக் கொண்டு செல்ல ட்ரக் இல்லாததால் பல ஆயிரக்கணக்கான லிற்றர் பாலை சாக்கடையில் கொட்டும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் ட்ரக் சாரதிகள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு கிரிஸ்துமஸ் காலகட்டத்தில் இன்னும் அதிகமாக பால் வீணாகும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் 10,000 லொறிகளுக்கு சாரதிகள் பற்றாக்குறை நிலவுவதால், பாலைக் கொண்டு செல்ல லொறி உட்பட ட்ரக் இல்லாததால் இரு மாதங்களில் 40,000 லிற்றர் பாலை சாக்கடையில் கொட்டியுள்ளதாக மத்திய பிரித்தானியாவை சேர்ந்த பால் உற்பத்தியாளர் ஒருவர் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் பால் உற்பத்தியில் பெரிய லாபம் இல்லாத நிலையில் பால் உற்பத்தியாளர்கள் சிலர் குறைந்த விலைக்கு பால் வாங்கும் நிறுவனங்களுக்கு பாலை விற்பனை செய்து வருகின்றனர்.
பிரித்தானியாவில் பனிப்பொழிவு இருக்கும் நிலையில் சாரதிகள் பால் உற்பத்தி நிலையங்களில் இருந்து பாலை இன்னுமும் மெதுவாகவே கொண்டு செல்ல வேண்டிய நிலை இருக்கும். இதனால் நிலைமை இன்னுமும் மோசமாக நேரிடலாம்.