தோழியுடன் ரொமான்ஸ்; இணையத்தில் வைரலாகும் உதயநிதி மகன்!
குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி படத்தின் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின்னர் நயன் தாரா, ஹன்சிகா போன்ற முன்னனி நடிகைகளுடன் அவர் நடத்த படங்களும் மாபெரும் வெற்றிபெற்றிருந்தன.
அதை தொடர்ந்து இறுதியாக நடந்த சட்ட மன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று தற்போது அந்த தொகுதியில் எண்ணெற்ற நலத்திட்டங்களை செய்து அசத்தி வரும் நிலையிஒல் சமீபத்தில் உதயநிதிக்கு விளையாட்டை துறை அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது.
தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட திட்டமிட்டு இருக்கும் உதயநிதி சினிமாவில் நடிப்பதை நிறுத்தப்போவதாகவும் அறிவித்து இருந்தார். உதயநிதி ஸ்டாலின் கடந்த 2002ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கிருத்திகா மற்றும் உதயநிதி ஸ்டாலின்னுக்கு இன்பநிதி என்ற மகனும் தமன்யா என்ற மகளும் உள்ளனர்.அவரது மகn ஸ்போர்ட்ஸ்ஸில் அசத்தி வருகிறார். உதயநிதியின் மகன், ஒரு கால்பந்து வீரர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நெரோகா எஃப்சி (North East Reorganising Cultural Association (Neroca)) என்ற கால்பந்து அணிக்குத் தமிழகத்திலிருந்து உதயநிதியின் மகன் தேர்வாகி இருந்தார்.
தோழியுடன் புகைப்படங்கள்
இந்நிலையில் உதயநிதி அமைச்சர் ஆனதில் இருந்தே அவரது மகன் இன்பநிதியும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.
இப்படி ஒரு நிலையில் இன்பநிதி தனது தோழியுடன் இருக்கும் சில புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் திமுகவிற்கு எதிரானவர்கள் அதிகம் பகிர்ந்து கேலி செய்து வருகின்றனர்.
கிருத்திகா ட்விட்டர்
அதே போல அரசியல் வாதி மகனுக்கு தோழி இருக்க கூடாதா என்ன என்று இன்பநிதிக்கு ஆதரவாக பலர் பதிவிட்டு வருகின்றனர். இப்படியான ஒரு நிலையில் உதயநிதியின் மனைவி கிருத்திகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
Don't be afraid to love and express it. It's one of the ways to understand nature in it's full glory.
— kiruthiga udhayanidh (@astrokiru) January 5, 2023
அதில் ‘காதலிப்பதற்கு அதை வெளிப்படுத்துவதற்கும் எப்போதும் பயப்பட கூடாது. இயற்கையை அதன் முழு மகிமையில் புரிந்துகொள்வதற்கான வழிகளில் இதுவும் ஒன்றாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கிருத்திகாவின் இந்த பதிவு மகனின் லீக் புகைப்படங்களை குறிப்பிட்டே சூசகமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.