நாட்டை ஆள்வது கோட்டாபய இல்லை, இவர்தான்! உதய கம்மன்பில கூறிய தகவல்
இலங்கையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) இருந்தாலும் ஆட்சி புரிவது பசில் ராஜபக்ஷவே, (Basil Rajapaksa) அதுதான் இவ்வளவு பிரச்சினைகளிற்கும் காரணம் என முன்னாள் எரிபொருள் அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த 2021 ஜுன் மாதம் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்பட்டது. அப்போது நான், எரிபொருள் பற்றாக்குறை வராதென கூறினேன். அதேபோல எரிபொருள் பற்றாக்குறை வரவில்லை.
தற்போது 2022 ஆண்டு பெப்ரவரி மாதம் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதென கூறினேன். அதற்காக டொலர் தாருங்கள், எரிபொருளை பெறுவதற்கு என பரிந்துரைத்தேன். கடைசியில் இன்று எரிபொருள் இன்றி பாரிய பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் வைத்தாலும் எங்களுக்கு ஜனாதிபதியுடன் பணி புரியமுடியும். ஆனால் நிதி அமைச்சருடன் தான் எங்களுக்கு பணிபுரியவே முடியாது.
அதாவது நாட்டில் ஜனாதிபதி இருந்தாலும் ஆட்சி புரிவது பசில் ராஜபக்ஷவே,
அதுதான் இவ்வளவு பிரச்சினைகளிற்கும் காரணம்.
இங்கு மக்கள் வரிசையில் நின்று மக்கள் துன்பப்படும் போதுதான் தெரிகிறது இவ் அரசாங்கத்தினால் எந்தப்பயனும் இல்லை என்று.
எனவே பாராளுமன்றத்தை கலைப்பது சிறந்த முறை- என்றார்.