அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி
குருநாகல - நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சொரம்பல நோக்கிச் சென்ற லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, தொலைபேசி கம்பம் மற்றும் ஒரு கல்வெர்ட்டில் மோதிய சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் பின்னால் பயணித்த இருவர் வாகனத்தில் நசுங்கி, நாரம்மல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 26 மற்றும் 29 வயதுடைய வவுனியா மற்றும் நெடுங்கேணியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாரம்மல பொலிஸாரால் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.