டேன் பிரியசாத் கொலை தொடர்பில் இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்
சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 2 சந்தேகநபர்களும் சாட்சியாளர்களால் இன்று அடையாளங்காட்டப்பட்டனர்.
இதற்கான அடையாள அணிவகுப்பு கொழும்பு பிரதான நீதவான் ஹர்சன கெகுனுவெலவின் உத்தரவுக்கமைய இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது குறித்த மூன்று சாட்சியாளர்களும் இரண்டு சந்தேகநபர்களையும் அடையாளம் கண்டு நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
இந்தநிலையில், சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கும் குறித்த கொலைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனத் தெரிவித்து ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தார்.
துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.