ரியாத் மற்றும் டுபாய்க்கு விமான சேவைகள் ஆரம்பம் ; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுயபாய்க்கு நாளாந்த விமான பயணங்களை மீண்டும் ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று திங்கட்கிழமை (09) இரவு முதல் ரியாத் நோக்கி நாளாந்த விமான பயணம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதேபோல், நாளை செவ்வாய்க்கிழமை முதல் டுபாய் நோக்கியும் நாளாந்த விமான் பயணங்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நிலவரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பும் நலனும் முதன்மையாகக் கருதப்படும் எனவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இயக்கப்படவுள்ள விமான பயணங்களின் விவரம்
UL265 – கொழும்பு → ரியாத் : மாலை 6.15
UL266 – ரியாத் → கொழும்பு : இரவு 10.35
UL231 – கொழும்பு → டுபாய் : நண்பகல் 12.40
UL232 – டுபாய் → கொழும்பு : மாலை 5.00
மேலும் தகவல்களுக்கு பொதுமக்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இணையதளமான www.srilankan.com ஐ பார்வையிடலாம்.