ஒரே மாணவியை காதலித்த இரு மாணவர்கள்... இறுதி நடந்த அதிர்ச்சி சம்பவம்!
கம்பகாவில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவரை மற்றொரு மாணவன் கத்தியால் குத்தியதில் குறித்த மாணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மகா வித்தியாலயத்தில் ஒரே மாணவியை தாக்குதல் நடத்திய மாணவனும், தாக்குதலுக்குள்ளான மாணவன் காதலித்து வந்துள்ளனர்.
இதன்போது, குறித்த இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தன்னுடைய காதலியான மாணவி மற்றுமொரு மாணவனை காதலிப்பதை அறிந்த 10ம் தர மாணவன், 9ம் தர மாணவனை பாடசாலை முடிந்ததும் பாடசாலைக்கு முன்பாக வைத்து தாக்கியதுடன் கத்தியால் குத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
கத்தியால் தாக்கியதில் மாணவனின் தோள்பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு வத்துப்பிட்டியால ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.