யாழில் பெரும் துயரை ஏற்படுத்திய படகு விபத்து ; பலி எண்ணிக்கை அதிகரித்தது.
யாழ்ப்பாணம் - பாலைதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் நேற் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக கடந்த 06ஆம் திகதி குருநகர் இறங்கு துறையில் இருந்து பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்கு உள்ளானது.

படகு விபத்து
இதன்போது கடலில் மூழ்கி அன்றைய தினம் இருவர் உயிரிழந்ததுடன், சிறுவன் உள்ளிட்ட 13 பேர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த உரும்பிராய் பகுதியை சேர்ந்த 64 வயதுடைய பெண் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை முன்னதாக நாவற்குழி பகுதியை சேர்ந்த 57 வயதுடையவரும், குருநகர், பழைய பூங்கா சாலையை சேர்ந்த 80 வயதுடைய ஒருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து அதிக சுமை காரணமாக ஏற்பட்டதா அல்லது இயந்திரக் கோளாறு காரணமா என்பது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாரும் கடற்படையினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.