இலங்கை பெண்கள் இருவர் இஸ்ரேலில் கைது
ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் செல்ல முயன்ற இலங்கைப் பெண்கள் இருவர் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளாதாகவும் கூறப்படுகின்றது.
இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்காணவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து காசாவில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேலில் சிக்கியயுள்ள இலன்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதுடன், அவர்களின் பாதுகாப்பினை உறுத்திபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.
அதேவேளை இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இரு இலன்கையர்கள் உயிரந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.