மன்னாரில் கொலை செய்யப்பட்ட இருவர்... அதிர வைக்கும் பின்னணி தகவல்கள்!
மன்னார் - உயிலங்குளம் பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட வாய் தர்க்கத்தை தொடர்ந்து 2 கிராமத்தவர்களிடையே மோதலாக உருவெடுத்துள்ளது.
இதனையடுத்து, ஜூன் மாதம் 10ஆம் திகதி சகோதரர்கள் இருவரை மற்றைய தரப்பினர் படுகொலை செய்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக வருகை தந்த சந்தேக நபர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர்களால் சரமாரியாக துப்பாக்கிச்சூட்டை இன்றையதினம் (16-01-2025) மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் ஆபத்தான நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அண்ணன், தம்பியை கொன்ற அனைவரையும் கொல்லும் நோக்கில் அவர்களின் கொலைக்கு பின்னர் தொடர்ச்சியாகவே பல கொலைகள், தாக்குதல் நடந்து வருவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.