அதிக விலைக்கு அரிசி விற்பனை; ஒரு மில்லியன் ரூபா அபராதம்
பேருவலை பகுதியில் கீரி சம்பா அரிசியை நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த பல்பொருள் அங்காடி விற்பனை நிலையமொன்றிற்கு எதிராக ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரசின் மொத்த சில்லறை விலையை விடவும் ஐந்து கிலோ எடைகொண்ட கீரி சம்பா அரிசி பொதி 1775 ரூபா என்ற கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அரியை விற்பனை செய்த அங்காடிக்கு ,களுத்துறை நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளனது.
இதேவேளை பொருட்களை வாங்கும் போது அதில் உற்பத்தி தர விலை அச்சிடப்பட்டுள்ளதா என பரிசோதித்து கொள்வனவு செய்யுமாறு பொதுமக்களுக்கு நுகர்வோர் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் அது குறித்து 1977க்கு முறையிடுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.