சுவிட்சர்லாந்தில் திருட்டில் ஈடுபட்ட இலங்கை சிறுவன் உட்பட இருவர் கைது
சுவிட்சர்லாந்தின் சோலத்தூண் மாநிலத்தில் மதுபான நிலையம் ஒன்றில் சனிக்கிழமை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையைச் சோந்த 16 வயதுடைய சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மேலதிக விசாரணை
சனிக்கிழமை, மாலை 7:30 மணியளவில் குடியிருப்பாளர் ஒருவர், ஓல்டனில் உள்ள கோஸ்கெர்ஸ்ட வீதியில் உள்ள ஒரு மூடப்பட்ட மதுபான நிலையத்திற்கு அருகில் இனம்தெரியாத இருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிவதாக சோலோத்தூண் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து ஓல்டன் பிரதான புகையிரத நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வைத்து இரண்டு சந்தேக நபர்களைத் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணைகளை மேற்கொண்ட போது இவர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் மற்றும் 15 வயதுடைய எரித்திரியன் நாட்டைச் சேர்ந்தவர் அடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மதுபான நிலையத்தை உடைத்து திருடப்பட்ட சில பொருட்களை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைக்காக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.