மட்டக்களப்பில் தொடரும் துயரம்; யானைகளால் பறிபோகும் மனித உயிர்கள்
மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்திற்குள் இன்று (27) அதிகாலை காட்டு யானை புகுந்து தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பெண்கள் காணமடைந்துள்ளனர்.
கொக்கட்டிச்சோலை முனைக்காடு கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புக்குந்த காட்டு யானை ஒன்று,மக்கள் குடியுருப்பு பிரதேசத்துக்குள் பிரவேசித்து திடீரென மக்களைத் தாக்கியுள்ளது.

அச்சத்தில் வாழும் மக்கள்
இதன்போது அதிகாலை வேளையில் வீட்டில் தனது கடமைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்த 75 வயதுடைய மூதாட்டி யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இதன்போது இரண்டு பெண்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் இன்று வரை மாவட்டத்தில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.