தமிழர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை மக்கள் நையப்புடைப்பு
கிளிநொச்சியில் வழிபறியில் ஈடுபட்ட இருவரை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பூநகரி பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கையை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரிடம் வழிபறியில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு மடக்கி பிடிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து முகக்கவசத்துடன் சென்ற இருவர் பரந்தன் பூநகரி வீதியில் உள்ள தம்பிராய் பகுதியில் குறித்த வர்த்தரின் தொலைபேசி மற்றும் பணப்பையை பறித்துகொண்டு தப்பி செல்ல முற்பட்டுள்ளனர்.
அவ்வீதியால் பயணித்த மக்களுக்கு விடயத்தை பாதிக்கப்பட்ட வர்த்தகர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த இருவரையும் துரத்திச் சென்ற பொது மக்கள், இருவரையும் மடக்கிப் பிடிக்க முயற்சித்த நிலையில், முட்கொம்பன் பகுதிக்குள் சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.
முட்கொம்பன் காரியன்கட்டுக் குளம் பகுதியினூடாக தப்பிச் செல்ல முற்பட்ட குறித்த இருவரையும் பிரதேச மக்களின் உதவியுடன் மடக்கி பிடித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை நையப்புடைந்த மக்கள் பொலிசாரிடம் கையளித்துள்ளனர்.