தமிழர் பகுதியில் மொபைல்....மோட்டார் சைக்கிள் என ஊர்சுற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில் இப்படியும் இருவர்!
தமிழர் பகுதியில் மொபைல்....மோட்டார் சைக்கிள் என ஊர்சுற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில் , A9 வீதியில் வீட்டின் கஸ்ரம் உணர்ந்து பாலைபழம் விற்கு பதினம் வயது இரு சிறுவர்கள் தொடர்பில் நெகிழவைக்கும் தகவலொன்று வெளியாகியுள்ளது.
குறித்த சிறுவர்கள் தொடர்பில் முகநூலில் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது,
வழக்கம் போல A9 வீதியில் பயணித்து கொண்டிருந்தேன். பரந்தன் சந்தியின் வீதியோரத்தில் பலர் வாகனங்களை மறித்து பாலைப்பழம் விற்றுக்கொண்டிருந்தனர். பதன்ம வயதுடைய இரண்டு சிறுவர்கள்(அண்ணன், தம்பி) அருகில் பைக்கை நிறுத்தி தம்பி எவ்வளவுடா என்று கேட்டேன் பை 200 ரூபாய் என்றார்கள்.
2 பை தரச்சொல்லி 1000 ரூபாய் குடுத்தேன். ஆயிரம் ரூபாயை பார்த்த அவர்கள் அண்ணா இன்னும் 2 பை அதிகம் வாங்குங்க மொத்தமாக 4க்கும் 700 தாங்க என்று கேட்டார்கள். நான் 4 வேண்டாம் தம்பி என்று சொல்ல , அதில் ஒருவன் அண்ணா தயவுசெய்து வாங்கிக்கோங்க வீட்ட போகனும் என்று கெஞ்ச தொடங்கினான்.
நான் சரி 4 பை தாங்க உங்கட 100 ரூபா Discount எல்லாம் வேண்டாம் நீங்க 800 ரூபாயை எடுங்க என்டு சொன்னேன். அவர்களும் 4 பைகளையும் 200 ரூபா மிச்சத்தையும் தந்தார்கள். அதில் ஒருவன் வீட்ட போன் எடுக்கனும் ஒருக்கா போனை தாறீங்களானு கேட்டபோது நானும் கொடுத்தேன்.
அவன் தனது தாயாருக்கு போன் எடுத்து அம்மா இன்னும் 5 பை தான் இருக்கு இன்னும் அரை மணித்தியாலத்தில் விற்று முடிஞ்சிடும். முடிய நாங்க வெளிக்கிட்டிடுவோம் எப்படியும் வீட்ட வாறத்துக்கு 9 மணி ஆகும் கூறி போனை என்னிடம் கொடுத்தான்.
இந்நிலையில் இருவரும் எங்க இருந்து வாறீங்கடானு கேட்க அவங்க பூநகரி என்றாங்க. அவ்வளவு தூரத்தில் இருந்து நீங்க ஏன்டா வந்தீங்க வீட்ட அப்பா என்ன பண்றார் என்று கேட்டேன். அப்பா சண்டைக்குள்ள செத்துட்டார் அண்ணா .... வீட்ல கஷ்டம் அதான் நாங்க வந்து விற்கிறோம் என்றார்கள். இன்டைக்கு ஊரடங்கு ஆச்சே என்னத்துல வந்தீங்க திரும்ப எப்படி பூநகரி போவீங்க என்று கேட்டேன். சைக்கிள்ள வந்தோம் அண்ணா திரும்ப சைக்கிள்ல தான் போகனும் என்று சொன்னார்கள்.
பரந்தனில் இருந்து பூநகரி 22 Km சைக்கிளில் போகனும் என்றால் கிட்டத்தட்ட 3 மணித்தியாலம் ஆகும். அந்த சிறுவர்கள் இருவருக்கும் 15,16 வயசு இருக்கும். இந்த வயசில் இவ்வளவு தூரம் சைக்கிளில் வந்து பழம் விற்கிற இவர்களின் நிலையை நினைத்து வருத்தபடுவதா அல்லது இவர்களின் மன வலிமையை கண்டு சந்தோசபடுவதா என தெரியாமல் மிகுதியாக தந்த அந்த 200 ரூபாய்க்கும் மேலும் ஒரு பாலைப்பழ பை வாங்கிட்டு நான் வெளிக்கிட்டேன்.
ஒருபக்கம் Ol, AL பெயில் ஆகிட்டு ஒரு வேலையும் செய்யாம வெளிநாட்டில் இருந்து மாமனும், சித்தப்பனும் அனுப்பும் காசில் பைக், ஐபோன் என வாங்கி தற்குறிபோல ஒருக்கூட்டம நம்ம நாட்டில சுத்திட்டு இருக்கு..
இன்னொரு பக்கம் இவர்களை போல தந்தையை சிறிய வயதில் இழந்து படிக்க வசதியில்லாமல், வறுமையில் காரணமாக சந்தோசமாக விளையாட வேண்டிய வயசில் மூன்று வேளை உணவுக்காக நித்தம் கஷ்டபடும் சிறுவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.... எமது சமூகம் சமநிலையற்று சிதைந்து போயுள்ளது என குறித்த நபர் பதிவிட்டுள்ளார்.