கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் வரிசையில் நின்ற இருவர் திடீர் மரணம்!
கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் வரிசையில் நின்ற இருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
குறித்த இருவரும் ஒட்சிசன் மட்டம் குறைவடைந் தமையால் வெளி நோயாளர் பிரிவில் உயிரிழந் துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒட்சிசன் உதவியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த திங்கட்கிழமை வரை 614 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் ஒட்சிசன் உதவியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 1000 வரை அதிகரிக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இதன் காரண்மாக எதிர்காலத்தில் ஒட்சிசனுக்கான தேவை பாரியளவில் அதிகரிக்கக் கூடும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.