கனகராயன்குளம் ஏ-09 வீதி விபத்தில் இருவர் உயிரிழப்பு; நடந்து சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்
வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 வீதியின் கனகராயன்குளம் பகுதியில் நேற்று இரவு புளியங்குளம் நோக்கி பயணித்த கார் ஒன்று, அதே திசையில் வீதியின் ஓரமாக நடந்து சென்ற இரு பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இரு பாதசாரிகளும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 40 வயதுடைய கனகராயன்குளம் மற்றும் ஒட்டிசுட்டான் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

விபத்து நடந்த வேளையில், காருக்குப் பின்னால் பயணித்த வேன் ஒன்றும் காரின் பின் பகுதியில் மோதியுள்ளது. விபத்தின் பின்னர் தப்பியோடியிருந்த வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், காரின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் குறித்து கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்