நீர்கொழும்பில் இரு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு
நீர்கொழும்பு நகரம் மற்றும் கட்டுவ ஆகிய பிரதேசங்களில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளிலிருந்து மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு , கொச்சிக்கடை, கல்கமுவ மற்றும் கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 40 வயதுடைய நபரும் 24, 38 மற்றும் 52 வயதுடைய மூன்று பெண்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.