இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சட்டவிரோத புறாக்களுடன் இருவர் கைது
இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட புறாக்களின் தொகுதியுடன் இரண்டு பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு இன்று (9) மேலதிக விசாரணைக்காக கண்டகுளிய வனவிலங்கு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
கல்பிட்டிக்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட கப்பலின் நடத்துனர் மற்றும் மற்றொரு நபரை கைதுசெய்து சோதனை செய்தபோது படகில் உள்ள பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 149 புறாக்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட புறாக்கள் இராமேஸ்வரம் அல்லது அருகிலுள்ள இடத்திலிருந்து இலங்கை கடல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் கடலில் உள்ள இலங்கை மீன்பிடி கப்பலிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு கொண்டு வரப்பட்ட புறாக்களின் தொகுதி கடற்படையினரால் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
கல்பிட்டிக்கு ஒரு ஜோடி புறாக்களை கொண்டு வந்த பிறகு, ஒவ்வொரு ஜோடி புறாக்களையும் 50,000 முதல் 1,00,000 ரூபாய் வரை விற்கத் தயாராக இருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.