ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரி அடையாளம் ; நிசாம் காரியப்பர் தெரிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டுவிட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரட்ன கூறியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி யார் என்பதை நாம் அடையாளம் கண்டுள்ளோம் என ரவி செனவிரட்ன தம்மிடம் கூறியதாக நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவிக்கான பதவியை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் போது ரவி செனவிரட்ன இவ்வாறு கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிசாம் காரியப்பர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் இன்றைய தினம்(9) பதிவிட்டுள்ளார்.
Before the High Posts Committee, in response to my question, Ravi Seneviratna stated:
— Nizam Kariapper (@Nizamkariapper) October 9, 2025
“We have identified the main conspirator behind the Easter Sunday attack.”
During his confirmation as Secretary to the Ministry of Public Security.#EasterAttack #SriLanka #Parliament…