தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலைகளுடன் கைதான இருவர் ; சோதனையில் கிடைத்த பொருட்களால் அதிர்ச்சி
பதுளை - கிராந்துருகோட்டை , அகலஓயா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பதுளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (24) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கிராந்துருகோட்டை , அகலஓயா பிரதேசத்தில் வசிக்கும் 32 மற்றும் 34 வயதுடையவர்கள் ஆவர்.

தீவிர விசாரணை
பதுளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கிராந்துருகோட்டை , அகலஓயா பிரதேசத்தில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தங்க முலாம் பூசப்பட்ட 7 புத்தர் சிலைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 32 வயதுடைய சந்தேக நபர் முதலில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 32 வயதுடைய சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிராந்துருகோட்டை, அகலஓயா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 34 வயதுடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.