போலந்து நாட்டுக்கு செல்ல முயன்ற இலங்கை பிரஜைகள் இருவர் கைது
போலி போலந்து விசாக்களைப் பயன்படுத்தி போலந்து நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இலங்கை பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெமோதரை மற்றும் பெலிகம ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 31 மற்றும் 38 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் போலி போலந்து விசாக்களைப் பயன்படுத்தி கத்தாரிலிருந்து போலந்து நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (01) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.