களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிரடி நடவடிக்கை ; துப்பாக்கிச்சூட்டுக்கு உதவிய இருவர் கைது
துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்ய முயன்ற சம்பவத்திற்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய இரு சந்தேக நபர்களை களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இன்று உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி ; யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் எச்சரிக்கை
கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 27 வயதுடைய களுத்துறை வடக்கு மற்றும் போம்புவல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் மீது காவல்துறை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட உந்துருளிகளின் நிறத்தை மாற்றி சந்தேக நபர்கள் தம்வசம் வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உந்துருளிகளில் இருந்து கழற்றப்பட்ட பாகங்கள், உந்துருளியின் நிறத்தை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், போலி இலக்கத் தகடுகள், போலி வருமான வரி அனுமதிப்பத்திரம் ஆகியன இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.