ராணி எலிசபெத் மறைவை முன்னரே கணித்த நபர் ; வைரலாகும் பதிவு
பிரித்தானிய ராணியார் எலிசபெத்தின் மறைவு குறித்து முன் கூட்டியே டுவிட்டர் பயனர் ஒருவர் கணித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அதனை வெளியிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவு காரணமாக தனது 96 வயதில் நேற்றையதினம் காலமானார்.
இவரின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Queen Elizabeth II will die on September 8th 2022
— ? (@aidemleoxide) February 4, 2022
மேலும் பல உலக நாடுகளில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
வைரலாகும் பதிவு
இந்நிலையில் அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8, 2022 அன்று இறக்கிறார் என்று கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் திகதி டுவிட் செய்துள்ளார்.
Earth will be completely engulfed in flames on March 17th 2062
— ? (@aidemleoxide) May 24, 2022
மேலும் மே 25 ஆம் திகதி அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மார்ச் 17, 2062 அன்று பூமி முழுவதுமாக தீயில் மூழ்கும் என்றும் அவர் பதிவிட்டுள்ள்ளார்.
இந்நிலையில் ராணி எலிசபெத் தற்போது உயிரிழந்த நிலையில் குறித்த நபரின் டுவிட்டர் பதிவு வைரலாகி வருகின்றது.