யுவதியின் முறைப்பாட்டால் தந்தையும் மகனும் கைது ; தமிழர் பகுதியில் சம்பவம்
புத்தளம், வென்னப்புவை, மிரிஸ்ஸன்கொட்டுவ பிரதேசத்தில் போர் 12 ரக துப்பாக்கிக்குரிய தோட்டாக்களுடன் தந்தை மற்றும் மகன் வென்னப்புவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தான் காதலிப்பவருடன் வசித்து வருவதால், தந்தையும் சகோதரனும் தன்னை தாக்குவதற்கு முயற்சிப்பதாகவும் வீட்டில் தோட்டாக்கள் இருப்பதாகவும் 17 வயதுடைய யுவதி ஒருவர் வென்னப்புவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, வென்னப்புவை பொலிஸாரால் மிரிஸ்ஸன்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது வீட்டின் அலுமாரியில் இருந்து போர் 12 ரக துப்பாக்கிக்குரிய 24 தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.