தொழிலாளர்கள் மீது சரிந்து விழுந்த மண் மேடு ; மூவரும் பலி
Update: மாவனெல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர்.
மாவனெல்லை - மாணிக்கவ பகுதியில் கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தில் மண்மேடு சரிந்து விழுந்த நிலையில், மண்ணுக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அனர்த்தம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று தொழிலாளர்கள் மண்ணுக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மண்ணுக்குள் சிக்கிய மற்றைய தொழிலாளரை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.