விஜய் ஆட்சி அமைக்க வாய்ப்பு மறுக்கப்படுவது தமிழக மக்கள் தீர்ப்பை அவமதிக்கும் செயல் ; நடிகை ஸ்ரேயா
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் கடந்தும், ஆட்சி அமைப்பதில் நிலவும் இழுபறி நீடித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
108 இடங்களை கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், 'தமிழக வெற்றிக் கழகத்தை' ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவிற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

விஜய்க்கு ஆதரவாக குரல்....
இந்த சூழலில், திரையுலகை சேர்ந்தவர்களும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். அந்தவகையில் 'அழகிய தமிழ் மகன்' திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகை ஸ்ரேயா சரண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு முக்கியமான பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில், தவெக 108 இடங்களை வென்றுள்ளது. அவர்களுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு மறுக்கப்படுவது, தமிழக மக்கள் வழங்கிய தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்" என்ற கருத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 233 உறுப்பினர்களும் இன்னும் பதவிப் பிரமாணம் செய்ய முடியாமல் முடங்கியிருப்பது மாநிலத்திற்கு இழைக்கப்படும் அவமானம் மட்டுமல்ல,
ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் பேராதரவை பெற்ற ஒரு தலைவரை அதிகாரத்தைப் பயன்படுத்தி முடக்க நினைப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.