இடைத் தேர்தல்; மதுராந்தகத்தில் கெத்து காட்டும் தவெக, தாராபுரத்தில் அதிமுக! பரபரப்பில் தமிழகம்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அண்மை நிலவரப்படி மதுராந்தகம் தொகுதியில் தவெகவும், தாராபுரம் தொகுதியில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது. மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 20189 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.

2-வது இடத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமன் 13872 வாக்குகள் பெற்றுள்ளார். தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதி 9109 வாக்குகளும், தவெக வேட்பாளர் சத்யபாமா 8186 திமுக வேட்பாளர் 6693 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தாராபுரம் அதிமுக கோட்டையாக அறியப்படுகிறது. அனைத்து சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்த பின்னர், தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும்.