ஷிரந்தியால் இலங்கையில் ட்ரெண்டான புதிய வகை கண் நோய்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச 07 திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கைதின் போது அவர் அணிந்திருந்த கண்சிகிச்சை ப்ளாஸ்டர் குறித்த புகைப்படங்கள் வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
தற்போது சமூக வலைதளங்களில் பலர் இது போன்ற பிளாஸ்டர்களை ஒட்டி கேலிக்கையான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

கண் சிகிச்சை
பொதுவாக கண் சிகிச்சைகளுக்கு பின்னர் ஒட்டப்படும் குறித்த கண் கவசத்திற்கு X வடிவத்தில் ப்ளாஸ்டர்கள் ஒட்டப்படுவதில்லை என்பதும் வெளிபடுத்தப்பட்டிருந்த நிலையில் ஷிரந்தி ராஜபக்சவின் கண் ப்ளாஸ்டர்கள் தற்போது வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, இன்று (09) தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கண் பாதிப்பு காரணமாக நேற்று (08) சிறைச்சாலை மருத்துவ நிபுணரிடம் அவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.
இதன்படி, மருத்துவப் பரிந்துரையின் அடிப்படையில் தேசிய கண் மருத்துவமனையின் நிபுணர் ஒருவரிடம் அவரை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.