267 பயணிகளுடன் தரையிறங்குகையில் விமானம் பாரிய விபத்து; கேபின்களைக் கிழித்துக் கொண்டு சென்ற ரேடார் கம்பம்!

Turkey Flight World
By Sulokshi Jun 13, 2026 10:33 AM GMT
Report

  துருக்கியில் உள்ள அந்தல்யா (Antalya) சர்வதேச விமான நிலையத்தில் 267 பயணிகளுடன்  டாக்ஸிவேயில் சென்று கொண்டிருந்த டர்கிஷ் ஏர்லைன்ஸ் போயிங் 777 ரக விமானம் ஒன்று, எதிர்பாராதவிதமாகத் தரையிறங்கும் ரேடார் ஆண்டெனா கம்பத்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளான சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 விபத்தில், விமானத்தின் வலது இறக்கை பகுதி மற்றும் பயணிகள் அமர்ந்திருக்கும் கேபின் பக்கவாட்டுப் பகுதியில் ஒரு பிரம்மாண்ட ஓட்டை (Huge Hole) விழுந்துள்ளது.

267 பயணிகளுடன் தரையிறங்குகையில் விமானம் பாரிய விபத்து; கேபின்களைக் கிழித்துக் கொண்டு சென்ற ரேடார் கம்பம்! | Turkish Airlines Boeing 777 Collided Radar Antenna

சில நிமிடங்கள் பெரும் பதற்றமும் பரபரப்பும்....

 இந்த  விபத்தால்  விமான நிலைய வளாகத்தில் சில நிமிடங்கள் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.  சம்பவம்  தொடர்பில்  சர்வதேச ஊடகங்கள்  குறிப்பிட்டுள்ளதாவது,

நேற்றையதினம்  (12) இஸ்தான்புல்லில் இருந்து 267 பயணிகளுடன் புறப்பட்ட டர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘TK-2430’ என்ற அந்த விமானம், அந்தல்யா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய பாரிய தீப்பரவல்

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய பாரிய தீப்பரவல்

அதன் பின்னர் பயணிகள் இறங்கும் முனையத்தை நோக்கி (Gate) ஓடுதளத்தில் இருந்து டாக்ஸிவே வழியாக விமானம் மெதுவாகத் திரும்பிச் சென்று கொண்டிருந்தது.

அப்போது விமானத்தை இயக்கிய விமானிகள் தவறான பாதையைத் (Wrong Turn) தேர்வு செய்து, பிரம்மாண்ட விமானங்களுக்குப் பொருந்தாத ஒரு குறுகிய டாக்ஸிவே பாதைக்குள் நுழைந்ததே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இலங்கை பயணியால் ஆடிப்போன விமான நிலைய அதிகாரிகள்

இலங்கை பயணியால் ஆடிப்போன விமான நிலைய அதிகாரிகள்

மிகவும் குறுகிய பாதையில் போயிங் 777 போன்ற பெரிய அளவிலான விமானம் திரும்ப முற்பட்ட போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த தரையிறங்கும் ரேடார் ஆண்டெனா கம்பத்தின் மீது விமானத்தின் வலது இறக்கையின் நுனிப்பகுதி அதிவேகமாக மோதியது.

267 பயணிகளுடன் தரையிறங்குகையில் விமானம் பாரிய விபத்து; கேபின்களைக் கிழித்துக் கொண்டு சென்ற ரேடார் கம்பம்! | Turkish Airlines Boeing 777 Collided Radar Antenna

இந்த மோதலின் வீரியத்தில் ரேடார் கம்பம் உடைந்து நேராகப் பயணிகள் அமர்ந்திருந்த கேபின் பகுதிக்குள் ஊடுருவி, பக்கவாட்டுச் சுவர் மற்றும் மேல்புற உடைமைகளை வைக்கும் கேபின்களைக் கிழித்துக் கொண்டு உள்ளே நுழைந்தது.

கடைக்கு சென்ற 5 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

கடைக்கு சென்ற 5 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

இதனால் விமானத்தின் உட்புறச் சுவரில் ஒரு பெரிய ஓட்டை விழுந்ததைக் கண்டு உள்ளே இருந்த பயணிகள் மரண பயத்தில் அலறினர். விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் அவசரக் கால மீட்புக் குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.

விமானத்தில் இருந்த 267 பயணிகளும் அவசர அவசரமாகப் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டனர்.

பாலசந்திரன் தொடர்பில் காலம் கடந்து உருகும் டக்ளஸ் தேவானந்தா!

பாலசந்திரன் தொடர்பில் காலம் கடந்து உருகும் டக்ளஸ் தேவானந்தா!

இந்த அதிதிடீர் விபத்தில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகளுக்குப் பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், ஒரு பயணிக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் டர்கிஷ் ஏர்லைன்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்துத் துருக்கி விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US