பிடிவாதமான தொப்பை கொழுப்பை குறைக்கனுமா அப்போ இந்த உணவுகளை எடுத்துக்கோங்க
அதிகப்படியான தொப்பை கொழுப்பைக் குறைக்க விரைவான மற்றும் இயற்கையான வழி இருக்கிறது.
தொப்பை கொழுப்பு ஒரு அழகியல் கவலை மட்டுமல்ல அது அடிப்படை சுகாதார பிரச்சினைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
பிடிவாதமான தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் இயற்கையான மூலிகைகள் சமையலறையில்தான் உள்ளது.
மஞ்சள்
மஞ்சள் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்காக நன்கு அறியப்பட்ட மசாலா பொருள் ஆகும்.
மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற செயலில் உள்ள சேர்மமானது அடிவயிற்றில் கொழுப்பு சேர்வதைக் குறைக்க உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உணவில் மஞ்சளைச் சேர்ப்பது அல்லது அதை ஒரு துணைப் பொருளாக நீங்கள் உட்கொள்ளும் உணவில் சேர்ப்பது தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும்.
எடை இழப்பு பயணத்தில் இருக்கிறீர்கள் என்றால், மஞ்சளை உங்கள் உணவில் சேர்க்க மறக்காதீர்கள்.
வெந்தயம்
பல நூற்றாண்டுகளாக இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் வெந்தய விதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வெந்தயம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு திரட்சி குவிவதைக் குறைக்கவும் உதவும் என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது.
அந்த வகையில் உணவில் வெந்தயத்தைச் சேர்ப்பது ஒரு சுவையான மற்றும் பயனுள்ள தேர்வாக இருக்கும்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை ஒரு நறுமண மசாலா மட்டுமல்ல இது தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும் அற்புதமான மூலிகையும் கூட.
சில ஆய்வுகள் இலவங்கப்பட்டை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி உள்ள நபர்களில் தொப்பையை குறைக்கும் என்று கண்டறிந்துள்ளது.
இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் அதிகரித்த உடல் பருமனை குறைக்கவும் இந்த ஒரு மசாலா உங்களுக்கு உதவும்.
இஞ்சி
இஞ்சி அதன் செரிமான நன்மைகளுக்காக நன்கு அறியப்பட்ட மசாலா ஆகும்.
இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் எடையை குறைக்கவும் உதவும்.
இஞ்சி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பசியைக் குறைக்கவும் உதவுகிறது.
உடலில் தேவையற்ற கொழுப்புகள் தேங்கியிருந்தால், அதை குறைக்க இஞ்சி உதவும்.
தினமும் காலையில், நீங்கள் இஞ்சி தேநீர் அருந்தலாம் மற்றும் உங்கள் உணவுகளிலும் சேர்க்கலாம்.