எடை அதிகரிப்பை குறைக்கணுமா ?அப்போ இந்த பானங்களை அருத்துங்கள்!
எடை அதிகரிப்பு என்பது இன்றைய காலத்தில் மக்கள் சிரமப்படும் ஒரு முக்கிய பிரச்சனையாகும். எடையைக் குறைக்க விரும்பினால் பீட்ரூட் கட்டாயம் பலன் தரும்.
இன்றைய காலக்கட்டத்தில், மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் அவர்களுக்கு பல உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கும் அளவிற்கு மாறிவிட்டது.
அதில் ஒன்று தான் அதிகபடியான எடை அதிகரிப்பு. நொறுக்குத் தீனிகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் கூட உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட் ஜூஸ் ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனுடன் எடையைக் குறைக்கவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பீட்ரூட் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடையை சுலபமாக குறைக்க உதவும்.
கேரட் மற்றும் பீட்ரூட்
பீட்ரூட்டின் சுவை துவர்ப்புத்தன்மை கொண்டது. அதன் சுவையை சமநிலைப்படுத்த அதனுடன் கேரட்டைச் சேர்த்தும் அதன் ஜூஸை தயார் செய்யலாம்.
இதற்கு கேரட் மற்றும் பீட்ரூட்டை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும். இப்போது அதில் உப்பு கலந்து குடிக்கவும். சுவையை மாற்ற எலுமிச்சை சாறும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆப்பிள் மற்றும் பீட்ரூட்
பீட்ரூட்டில் ஆப்பிளை கலந்தும் இதன் ஜூஸை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஏனெனில் பீட்ரூட்டின் சுவை சற்று துவர்ப்பு தன்மை கொண்டது.
அத்தகைய சூழ்நிலையில் அதனுடன் ஆப்பிளைக் கலந்து அதன் சுவையை சமப்படுத்தலாம்.
பீட்ரூட் மற்றும் செலரி
செலரியில் குறைந்த அளவு கலோரியும் நிறைய தண்ணீர் சத்தும் உள்ளது. அதேசமயம் பீட்ரூட்டில் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது.
நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த இக்கலவையானது எடையை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதற்கு முதலில் பீட்ரூட் மற்றும் செலரியை நன்கு அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும்.
எலுமிச்சை சாறு கலந்து சுவை மிக்க இந்த பானத்தை பரிமாறலாம்.
இதேபோல் பிடித்த பழங்களுடன் மாதுளை, தக்காளி போன்றவற்றை கலந்து பீட்ரூட் சாறு தயார் செய்யலாம். எடை இழப்புக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.