மனைவியை மரத்தில் கட்டி வைத்து மிளகாய் பொடி தூவி தாக்குதல்
மனைவியை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக கூறப்படும் கடற்படை சிப்பாயை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் டி.எல். சமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் அநுராதபுரம் பரசன்கஸ்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

பாலியல் ரீதியாக சித்திரவதை
குறித்த கடற்படை சிப்பாய் தனது மனைவியை மரத்தில் கட்டி வைத்து அவர் மீது மிளகாய் பொடி தூவி பலமாக தாக்கி அவரை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
கடற்படை சிப்பாயின் மனைவி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடற்படை சிப்பாயின் மனைவியின் வைத்திய அறிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பரசன்கஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.