உயர் அழுத்த மின்கம்பியில் மோதிய லொறி ; காயங்களுடன் இருவர் வைத்தியசாலையில்
மில்லனிய பிரதேச சபை பணிமனையில் தண்ணீர்க் குழாய்களை இறக்கிக் கொண்டிருந்த இழுவை லொறி ஒன்று உயர் அழுத்த மின்கம்பியில் மோதுண்டதில் தீக்காயங்களுக்கான இருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அம்பத்தலையிலிருந்து மில்லனிய பிரதேச சபைக்கு கொண்டு வரப்பட்ட தண்ணீர்க் குழாய்களை இறக்கிக் கொண்டிருந்தபோது நேற்று (29) இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மின் தாக்குதல்
இழுவை லொறியின் மேற்பகுதி 33,000 வோல்ட் உயர் அழுத்த மின்கம்பியில் மோதுண்டது.
இதன்போது, அதன் சாரதியும் பிரதேச சபை சேவையாளர் ஒருவரும் தீக்காயங்களுடன் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
வாகனம் மின்கம்பியில் மோதியதில், அருகில் நின்று கொண்டிருந்த சாரதி மற்றும் பிரதேச சபை சேவையாளர் ஆகியோர் மின் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.