தமிழ்நாட்டின் ஆட்சி யாருக்கு? பொய்க்குமா விஜய்யின் கனவு ; ட்விஸ்ட் கொடுக்கும் கணிப்புகள்
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் திகதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு
தமிழகத்தில் பெரும்பான்மைக்கு 118 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று வௌியான தேர்தலுக்கு பின்னராக கருத்துக் கணிப்புகளில் தி.மு.கவின் ஆட்சி தொடரும் எனவும் அந்த கூட்டணி 120 தொகுதிகளை கைப்பற்றக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும், CNN, Times Now வௌியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் அ.தி.மு.க 114 - 124 இடங்களை கைப்பற்றி வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் Axis My India வௌியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் விஜய் தலைமையிலான த.வெ.க 98 - 120 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒன்றாக நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. எவ்வாறாயினும் எதிர்வரும் 4 ஆம் திகதியே இறுதி முடிவு வௌியாகவுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் திகதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.