மித்தெனிய முக்கொலை; நாட்டைவிட்டு தப்பியோட முனைந்த சந்தேக நபர் கைது!
மித்தெனிய-வீரகெட்டிய சாலையில் கல்பொத்தாய பகுதியில் நடந்த முக் கொலையுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
தந்தை மற்றும் பிள்ளைகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில், கொடூரமான கொலைக்கு உதவியதற்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபர், கொலைக்குப் பிறகு தனது வீட்டை விட்டு வெளியேறி தியத்தலாவை பகுதியில் மறைந்து கொண்டார்.
தந்தை மற்றும் பிள்ளைகள் மீது துப்பாக்கி சூடு
இந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு புறப்படுவதற்காக விமான நிலையத்திற்கு வந்தபோது குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
கைதான சந்தேக நபர் கட்டுவன, அகுலந்தெனிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அதற்கமைய, சம்பவம் தொடர்பில் இதுவரை 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மித்தெனிய பொலிஸாரும் தங்காலை குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த மாதம் 18ஆம் திகதி மீகஸ்ஆரே கஜ்ஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.