தமிழர் பகுதியில் 17 சிறுமிக்கு இளைஞனால் நேர்ந்த கொடூரம்! பெரும் சோக சம்பவம்
திருகோணமலை - கோமரங்கடவல பகுதியில் புத்தாடை தைக்க சென்ற 17 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவதினத்தன்று குறித்த சிறுமி புதிய ஆடை ஒன்றினை தைப்பதற்காக சுகாதார வைத்திய பணிமனைக்கு அருகில் உள்ள தையல் கடைக்கு சென்றுள்ளார்.
இதன்போது, குறித்த இளைஞன் புதிய ஆடையை தைத்து தருவதற்கு சற்று நேரம் ஆகும் அதனால் இவ்விடத்திலேயே இருக்கும்படி தெரிவித்துள்ளார்.
சற்று நேரத்தின் பின் கடையை மூடிவிட்டு சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கோமரங்கடவல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஜனவரி 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.