பெளத்த மதத்திற்கு அவமரியாதை ; திருகோணமலையில் ஆர்பாட்டத்தில் குதித்த மூவர்
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் பெளத்த சமயத்தை அவமரியாதைக்கு உற்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று கூறி திருகோணமலை நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்பாக மூன்று பேர் வீதியில் அமர்ந்து இன்று (2) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுஜன அரகலய குடிமக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் செயலாளர் மற்றும் சிங்கள பெளத்த ஐக்கியம் அமைப்பின் செயலாளர் ஆகியோரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்
திருகோணமலை நீதவான் நீதிமன்றில்,திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோத கட்டுமானத்தை அமைத்து, அதில் புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பான வழக்கு நடைபெற்ற சந்தர்ப்பத்திலேயே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.