இரகசிய தகவலால் வசமாக சிக்கிய உயர்தர மாணவர்கள் ; சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி
உயர்தர பரீட்சை எழுதவிருக்கும் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட அவர்களுக்கு கஞ்சா போதைப்பொருளை விநியோகித்த நபர் ஒருவருமாக மூவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகலை அலகொல்கம பகுதியில் 4850 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரகசிய தகவல்
லுணுகலை பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய லுணுகலை அலகொல்கமைக்கு சென்ற பொலிஸார் சந்தேக நபர்களை சோதனைக்கு உட்படுத்தியபோது இரு பாடசாலை மாணவர்களிடமும் 1750 மில்லி கிராம் ஒருவரிடமும் 1300 மில்லி கிராம் மற்றைய மாணவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த இரண்டு மாணவர்களுக்கும் கஞ்சா போதைப்பொருளை விநியோகித்த நபரிடம் இருந்து 1800 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நாளை (03) பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக லுணுகலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.