திருகோணமலை மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரையில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தவறிய 20 வயதிற்கு மேற்பட்டோருக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை 10-01-2022 ஆம் திகதி முதல்13-01-2022ஆம் திகதி வியாழக்கிழமை வரையுள்ள காலப்பகுதியில் திருகோணமலை மட்களி அசெம்பிளி கோல்ட்ஒப் ஜெர்ச், திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள குளக்கோட்டன் மண்டபம் மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலை வழங்கப்படவுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கை, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ள காலப்பகுதியில் நடைபெறவுள்ளதால் உரியவர்கள் இச்சேவையை தவறாது பெற்றுக் கொள்ளுமாறு திருகோணமலை சுகாதர வைத்திய அதிகாரி அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி வழங்கும் சேவையை 60 வயதிற்கு மேற்பட்டோரின் ஏதாவது இரண்டு கொரோனா தடுப்பூசியை பெற்று ஆறு மாதங்கள் நிறைவுற்று இருப்பதுடன் 20 வயதிற்கு மேற்பட்டோரில் ஏதாவது இரண்டு கொரோனா தடுப்பூசிகளை பெற்று மூன்று மாதங்கள் நிறைவுற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசியினை தவறாது உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ளுமாறும் தடுப்பூசியினை பெற வருகைதரும் நபர்கள் தவறாமல் தங்களுக்குரிய கொரோனா தடுப்பூசி அட்டையுடன் சமூகமளிக்குமாறும் திருகோணமலை சுகாதர வைத்திய அதிகாரி அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.