யாழில் பெரும் துயர சம்பவம் ; தற்கொலை செய்யபோவதாக மனைவியை மிரட்டியவருக்கு நேர்ந்த கதி
தற்கொலை செய்யபோவதாக மனைவியை மிரட்டியவர், கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (14) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மூச்சு திணறல்
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இரவு மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவி பிள்ளைகளுடன் முரண்பட்ட நிலையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.
பின்னர் கதிரையில் அமர்ந்திருந்து கழுத்தில் சுருக்கிட்டவாறு தான் தற்கொலை செய்யபோவதாக மனைவியுடன் தொலைபேசியில் உரையாடினார். கைபேசியில் உரையாடியவாறே மதுபோதையில் உறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் சகோதரன் அவரது கழுத்தில் இருந்த கயிற்றினை கழற்றிவிட்டு கீழே உறங்க வைத்துள்ளதாகவும் இந்நிலையில் சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதனால் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (14) அதிகாலை உயிரிழந்துள்ளார்.