திருகோணமலை காணிகள் அமெரிக்காவிற்கு வழங்கப்படாது; கெஹெலிய
திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த 33,000 ஏக்கர் நிலப்பரப்பை முதலீடுக்காக அமெரிக்க நிறுவமொன்றுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியான தகவலை முழுமையாக நிராகரிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில்' திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த 33,000 ஏக்கர் நிலப்பரப்பை முதலீடுக்காக அமெரிக்க நிறுவமொன்றுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை ' தொடர்பில் வினவிய போது அவர் இதனை கூறினார்.
இது தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த கருத்தினை அவர் முழுமையாக நிராகரித்துள்ளார். அவ்வாறு எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.