மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவான திருகோணமலை நீதிபதி!
மேல் நீதிமன்ற நீதிபதியாக திருகோணமலை மாவட்ட நீதிபதி எம். கணேசராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட கௌரவ நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா சர்வதேச மனித உரிமைகள் விருதினை பெறுவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவில் மற்றும் அமெரிக்காவில் இருந்து முதுகலைப் பட்டம், 3 முதுகலை டிப்ளோமோ, 2 டிப்ளோமோ, 3 சர்வதேச மனித உரிமை விருதுகள் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
மேலும், சர்வதேச நீதியரசர்கள் ஆணைக் குழுவினால் 5 வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வரும் "மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் சிறந்த பங்களிப்பிற்காக" என்ற விருதிணையும் பெற்றுள்ளார்.
இதேவேளை, நீதிபதி எம்.கணேசராஜாவின் பதவியேற்பு விழா எதிர்வரும் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறயிருப்பதும் குறிப்பிடத்தக்கது.