வைத்தியசாலையில் உள்ள இந்து மகளிர் கல்லூரி அதிபரை நலம் காண சென்ற அதீன குரு! (Photo)
திருகோணமலையில் உள்ள சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன் பாரிய ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (02.02 2022) பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், நலன் விரும்பிகளால் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் போது மூன்று ஆசிரியர்களுடனும் வருகைதந்த ஒரு சில இனம்தெரியாத நபர்களால் சண்முகா இந்துகல்லூரியின் அதிபர் தாக்கப்பட்டுள்ளார்.

பின்னர் தாக்குதலில் போது மயக்கம் அடைந்து, அருகில் இருந்த ஆசிரியர்கள் உடனே அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றனர். தற்போது அதிபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இதேவேளை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபரை ஆதீன குரு மகாசந்நிதானம் (Guru Maha Sannithanam) நலம் காண சென்றுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவலுக்கு...
திருகோணமலை பிரபல பெண்கள் பாடசாலை அதிபர் மீதான தாக்குதல் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!