திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; தீர்ப்பு ஒத்திவைப்பு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கபப்ட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட ஆறு பேரை விளக்கமறியலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்று குறித்த தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த போதிலும், தீர்ப்புரை இன்னும் முழுமையாகத் தயாராகவில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அறிவித்திருந்ததற்கமைய, தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.