திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; மீண்டும் கம்பி எண்ணும் தேரர் உள்ளிட்டோர்!
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் வண. பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஆறு பேர் என மொத்தம் 10 சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதற்கமைய, குறித்த சந்தேகநபர்கள் அனைவரும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளனர்.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவை நீதிம்ன்றம் பிறப்பித்துள்ளது.