வீதியைக் கடக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம் ; இரவில் நடந்த விபரீதம்
கம்பஹா - தொம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொம்பே - பூகொட வீதியில். நேற்று (14) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பூகொட நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பெண் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மேலதிக விசாரணை
இந்த விபத்தில் காயமடைந்த பெண் பாதசாரி தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கப்புகொட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய பெண்ணும் பின்னால் பயணித்த பெண்ணும் காயமடைந்து தொம்பே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.