திருகோணமலையில் இடம்பெற்ற பெரும் துயரம்; அதிகரிக்கும் மாணவர்களின் மரணங்கள்
திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு பாதை விபத்துக்குள்ளானதில் காணாமற் போயிருந்த 17 பேர் தற்போதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் பாடசாலை மாணர்வர்கள் மூவர் அடங்குகின்றனர் என கடற்படை அறிவித்துள்ளது.
இந்நிலையில் காணாமற்போன ஏனையோரை மீட்டெடுக்கும் பணிகளில், கடற்படையின் சிறப்புப் படயணி, உடனடி செயல்பாட்டுப் படையணி, கடற் படையணி உள்ளிட்ட சில சிறப்பு அணிகளும், சுழியோடிகளைச் சேர்ந்த எட்டு குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதெவேளை இன்றுகாலை இடம்பெற்ற படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள் உட்பட 10 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 20 பேர் பயணித்துள்ள இந்தப் படகு பாதையில் பயணித்த சிலர் நீந்திக் கரையேறியுள்ளதுடன், ஏனையோரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை கிண்ணியா குறிஞ்சாங்கேணி பகுதியில் பாலம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதால் மக்களுக்கான போக்குவரத்துக்காக குறித்த ஆற்றினை கடப்பதற்கு இழுவவை படகினை பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் தினமும் இந்த இழுவைபடகின் ஊடாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பற்ற முறையில் பயணம் மேற்கொண்டுவந்த நிலையில் இன்று காலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இருந்த போதிலும் கிண்ணியா மக்களின் நீண்டநாள் கனவாக காணப்படும் இந்த பாலம் புனரமைப்பு பணிகள் 750 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
இலங்கையில் இன்று காலை இடம்பெற்ற துயரம்; 6 மாணவர்கள் பலி
கிண்ணியாவில் பெரும் பதற்ற நிலை!





