சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம் ; சகல நன்மைகளையும் அடையப்போகும் ராசிகள் இவர்கள் தான்
ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இந்நிலையில் இந்த சூரியன் அக்டோபர் 17 ஆம் திகதி துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். துலாம் ராசியில் சூரியன் நுழையும் போது, அந்த ராசியில் ஏற்கனவே சுக்கிரனும், புதனும் இருப்பதால், இந்த 3 கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.
ஜோதிடத்தின் படி, இந்த யோகமானது மங்களகரமான யோகங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் தொழிலில் முன்னேற்றத்தையும், நிதி நிலையில் நல்ல உயர்வையும் உண்டாக்கும்.

அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
மேஷம் : மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் வேலைகளில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியைக் காண்பார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமான வழிகள் உருவாகும். நிதி நிலைமை மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
ரிஷபம்: ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் விரும்பிய முன்னேற்றத்தை அடைய வாய்ப்புள்ளது. மாணவர்களின் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலை மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வணிகர்கள் புதிய வாய்ப்புகளால் நல்ல பலனைப் பெறுவார்கள்.
துலாம்: துலாம் ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் பயனுள்ளதாக இருக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்புகள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். பரஸ்பர நம்பிக்கையும் நெருக்கமும் வளரும். உங்கள் காதல் துணையுடன் தரமான நேரத்தைச் செலவிட உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும்.