மோட்டார் சைக்கிளில் சென்ற ஆணும் பெண்ணும் அதிரடி கைது
கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரன்முத்துகல வீதிப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஜுன் 09 ஆம் திகதி ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரின் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையின் மூலம் பெறப்பட்ட தகவலுக்கு அமைய, நேற்று (01) இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
இதன்போது, 510 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைத் தம்வசம் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளையிலேயே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர் 34 வயதுடையவர் என்பதோடு, பெண் சந்தேகநபர் 33 வயதுடையவர் எனவும், இருவரும் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இச் சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.